பெஞ்சல் புயலால் தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று டிபி சத்திரம் பகுதிக்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து நிவாரண உதவி செய்தார். அவர் நேரில் வந்து உதவி செய்யாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் வெள்ள பாதிப்படைந்த மக்களை நேரில் சந்திக்க செல்லவில்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வேறு வேலைகள் திட்டமிட்டு இருப்பேன் இல்லையா..? என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.