தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிந்து மாதவி. இவர் தமிழில் சிவகார்த்திகேயன், விமல், சிபிராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றார். இவர் தற்போது தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகை பிந்து மாதவி சமீபத்தில் அளித்த பேட்டியில் நிர்வாணமாக நடிப்பது குறித்து பேசி உள்ளார்.

அவர் கூறியதாவது, நடிகைகள் யாரும் வாய்ப்புக்காக நிர்வாணம் ஆக நடிப்பதில்லை. அந்த படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் தான் நிர்வாணமாக நடிக்கிறார்கள். மேலும் படத்திற்காக ஒருவேளை நான் அப்படி நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் நான் நிர்வாணமாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.