நான் நன்றாக விளையாடுவதில்லை, என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்..

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தனது மோசமான பார்ம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து தன்னை நீக்குமாறு நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை அணியில் சேர்க்க பரிந்துரைத்ததாகவும் ரிஸ்வான் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த 2022 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ரிஸ்வான் மொத்தம் 141 ரன்கள் எடுத்தார். இந்த 3 டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்து விமர்சனங்களை சந்தித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் ரிஸ்வான் சேர்க்கப்படவில்லை. ரிஸ்வான் தனது மோசமான பேட்டிங் ஆட்டத்தால் அணியில் இடம் பெற தகுதியற்றவர் என்று கிரிக்கெட் பாகிஸ்தானிடம் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு நான் என்ன சொன்னேன் என்று பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சக்லான் முஷ்டாக்கிடம் நீங்கள் கேட்கலாம். சர்பராஸ் அகமது சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் நான் அதை விரும்பினேன். நான் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை, அடுத்த தொடருக்கான அணியில் இடம் பெற தகுதியில்லை என்று உணர்ந்தேன்.”சில மோசமான ஆட்டங்கள் காரணமாக பெஞ்சில் உட்கார வேண்டாம் என்று சில வீரர்கள் என்னிடம் சொன்னார்கள்” என்று முகமது ரிஸ்வான் தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பிடித்த சர்பராஸ் அகமது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 2 டெஸ்ட்  போட்டியிலும்  335 ரன்கள் எடுத்தார். இந்த 2 டெஸ்ட் போட்டியும் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.