கமல்ஹாசன் நடிப்பில் 2008 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தசாவதாரம். இந்த படம் பெரும் வெற்றி மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் குவித்தது. தசாவதாரம் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் .அப்பொழுது மேடையில் பேசிய விஜய் நாங்கள் ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்கும்பொழுது காவல்துறை அதிகாரியோ, டாக்டரோ என்று ஏதாவது ஒரு கேரக்டர் நடிக்கும் பொழுது அந்த துறைகளில் சிறந்தவர்களிடம் சென்று அவர்களுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு அதை திறமையாக கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.

ஆனால் கமலஹாசன் ஒரு காவலர் கேரக்டரில் நடித்தால் ஊரில் இருக்கக்கூடிய அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு காவல்துறை அதிகாரி எப்படி கெத்தாக இருக்க வேண்டும் என்று கமல்ஹாசனை பார்த்து கற்றுக் கொள்வார்கள் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். கமல் சாறை நான் பாராட்ட வேண்டும். ஆனால் நான் பாராட்ட போவதில்லை. ஏன் என்றால் என்னதான் புத்திசாலி மாணவனாக இருந்தாலும் வாத்தியாரை வாழ்த்தி ஒன்றும் இல்லை. அவருடைய கடமை எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பது. எங்களுடைய வேலை ரசித்துக் கொண்டே இருப்பது என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.