இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக ஒரு போஸ்ட்காட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியை Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அதற்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரெய்லரில் பிரதமர் மோடி பிரதமர் பதவியில் கடமைகள் முதல் சர்வதேச பிரச்சனைகள் வரை பேசியுள்ளார். குறிப்பாக முதலமைச்சர் ஆக குஜராத்தில் தான் இருந்த காலகட்டத்தை அவர் பகிர்ந்த போது நானும் கூட சில தவறுகள் செய்திருக்கலாம் என்றார்.

அதோடு தவறுகள் செய்யாமல் இருக்க நான் ஒன்னும் கடவுள் கிடையாது. நானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த ட்ரெய்லர் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ உங்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மற்றவர்களை போன்று நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டவன் நான் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.