ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர் கெதன் கான்சி தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்கையை நடத்தி வந்துள்ளார். சென்ற செப்டம்பரில் இவரது கணக்கிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை அறிந்த கான்சி அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று விபரம் கேட்டு உள்ளார். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
எனினும் அதிகாரிகள் கான்சியின் புகார் மனுவை அலைக்கழித்துள்ளனர். இதனிடையே அலுவலக பதிவுகள் அனைத்திலும் அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ பதிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் கான்சி 8 மாதங்களாக அலுவலக பதிவில் மாற்றியமைத்து தனக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கக்கோரி தினசரி சென்று வருகிறார். இதுபற்று கான்சி கூறியதாவது “தான் இறந்துபோகவில்லை. அதிகாரபூர்வ பதிவுகளில் அதை மாற்றி தனக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். இதன் காரணமாக நான் உணவிற்கு கூட வழியின்றி தவிக்கிறேன். பொகாரோ மாவட்டத்தின் சமூகபாதுகாப்பு உதவி இயக்குனரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன்” என்றார்.