தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நடிகை அனிகா ஒரு பேட்டியில் கிளாமர் புகைப்படங்களுக்கு வரும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதால் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகைகள் மோசமான விமர்சனங்களை சந்திக்கிறார்கள். இதற்கு சில தப்பான விமர்சனங்கள் வரும்போது மிகவும் வருத்தமாக இருக்கும். எப்படி டிரஸ் பண்ணாலும் சிலர் தப்பா தான் பேசுவாங்க. இது என்னை ரொம்பவே பாதிக்கும். நானும் மனுஷன் தான என்று கூறியுள்ளார்.