திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சசி தரூருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி அவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் 100 பொய்களை கூறுகிறார். விலைமதிப்புள்ள விதவிதமான ஆடைகளை அணிகிறார்.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தாகும். நல்ல ஒரு எம்பியை தேர்வு செய்தால் போதும். எம்பிக்கள் சேர்ந்து திறமையான ஒருவரை பிரதமராக தேர்வு செய்து கொள்வார்கள்” என்றார்.