ஆந்திராவின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பெம்மசனி சந்திரசேகர் தனக்கு 5,785 கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவுக்கு கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகின்றார் 5,785 கோடி இருப்பதாக கூறியதன் மூலம் நாட்டிலேயே பணக்கார வேட்பாளராக அவர் கருதப்படுகிறார்.