மதுரை பெருங்குடி அருகே அதிமுக மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமை கழக உத்தரவின் பெயரில் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றோம்.

அன்று பேரறிஞர் அண்ணா திருப்பரங்குன்றத்தில் மாநாடு நடத்தியது போலஇன்று எடப்பாடி யாரின் உத்தரவின்படி அதே திருப்பரங்குன்றத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் மாநாடு இந்திய துணை கண்டமே வியக்கும் அளவில் நடைபெறும். அதே சமயம் இந்த மாநாட்டில் 50 லட்சம் முதல் ஒரு கோடி தொண்டர்கள் வரை பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.