இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பணிகளை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 25000 4ஜி டவர்களை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் அக்டோபர் மாதம் முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையானது கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 5ஜி சேவைகளையும் விரைவில் தொடங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மலிவு விலையில் பல ரீசார்ஜ் திட்டங்கள் இருப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். மேலும் 4ஜி சேவை அமல்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.