மக்களவைத் தொகுதி மறுவரையறை  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தற்போதைய எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை எவ்வித மாற்றமுமின்றி நிரந்தரமாகத் தொடர வேண்டும் என முதலமைச்சர் C.ஜோசப் விஜய் முழங்கியுள்ளார்.

மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற தற்போதைய அளவிலேயே எவ்வித மாற்றமும் செய்யாமல் நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய மாநில வாரியான விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையையே எக்காலத்திலும் மாற்றாமல் நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

“>

 

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் இந்த அதிரடி நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.