நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம் பி இருக்கையில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி இருக்கையில் இருந்து பணம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக அவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இது பற்றி அபிஷேக் சிங்வி கூறும்போது நேற்று நான் அவையில் 3 நிமிடங்கள் மட்டும் தான் இருந்தேன். கேண்டீனில் 30 நிமிடமிருந்தேன். அந்த பணம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது. மேலும் இது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.