இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணங்களை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் மிகவும் வசதியாகவும் கட்டணம் குறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் பண்டிகை காலங்களில் ரயிலில் கூட்ட நெரிசல்  என்பது இயற்கையாகவே நடக்கக்கூடிய விஷயம். இருக்கைக்காக பயணிகள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் கூட நடந்துள்ள நிலையில் தற்போது இருக்கை கிடைக்காததால் ஒரு பயணி செய்த விஷயம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் தற்காலிகமாக தூங்குவதற்காக கயிறால் ஒரு கட்டிலை உருவாக்கினார். இந்த செயலை சில பயணிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நவீன பிரச்சனைக்கு நவீன தீர்வு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.