80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ.

தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் குஷ்பு சமீப காலமாக நடிக்கவில்லை.இந்நிலையில்  நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.  இது குறித்து கூறிய குஷ்பு, நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வருவதாக தெரிவித்துள்ளார்.