திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் பாண்டி என்பவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கபடி வீரர் தீபக் பாண்டிக்கு 28 வயது ஆகிறது. கடந்த புதன்கிழமை இரவு தீபக் பாண்டி தன்னுடைய வீட்டில் உள்ள அனைவருக்கும் பரோட்டா வாங்கி கொடுத்து அவரும் சாப்பிட்டு உள்ளார்.

இதனை அடுத்து வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தீபக் பாண்டி திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.