விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். குறிப்பாக திமுக பாஜக கட்சிகளை விமர்சித்தார். விஜயின் பேச்சுக்கு  அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர்.

அதிமுகவில் நல்ல ஆட்சி இருந்ததால்தான் மாநாட்டில் விஜய் அதிமுக கட்சியை விமர்சிக்கவில்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, நல்ல ஆட்சி குறித்து அதிமுக பேசுவது ஒரு நல்ல நகைச்சுவை தான் என கூறியுள்ளார்.