பிரபல நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்களும் நயன்தாரா மற்றும் தனுஷ் பக்கம் இருக்கும் நியாயங்களை பேசி வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் அம்ரித் ரத்னா 2024 விருதை வாங்கினார். அவர் மேடையில் வைத்து ஓம் நமசிவாய என கூறி பேச்சை தொடங்கினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். நயன்தாரா வெளியிட்ட அறிக்கையின் கடைசி வாக்கியமும் அதுதான். அதனை தனுஷ் அடிக்கடி கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.