விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா, இப்போது மாகாபாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோன்று சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ஸ்டார்ட் ம்யூசிக் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ஸ்டார்ட் ம்யூசிக் செட்டிலிருந்து தொகுப்பாளினி பிரியங்காவை கடத்தி விட்டதாக புரோமோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். நிகழ்ச்சிக்காக இப்படியொரு ப்ரோமோவை தயார்செய்து வெளியிட்டுள்ள நிலையில், அந்த புரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.