#நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஸ்டாக் ட்வீட்டரில் ட்ரண்டாகி வருகிறது. அதிமுக பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுகவின் மா.செ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக தனது ட்வீட்டர் பக்கத்தில், “மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஸ்டாக்கை பதிவிட்டுள்ளனர். இது தற்போது ட்வீட்டரில் ட்ரண்டாகி வருகிறது.