10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய்யின் பேச்சை இயக்குநர் கரு.பழனியப்பன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”விஜய்யின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது. ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார். அதைப் படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்துவிடுவார்கள்… நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது.