அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சம்பவ நாளில் விமானம் ஒன்று நாஷ் வில்லி என்ற பகுதிக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பூனை ஒன்று அசால்டாக விமானத்தில் அங்கும் இங்குமாக நடந்து சென்றது. இந்த பூனையை விமான பணிப்பெண் கவனிக்கவில்லை.

அதாவது விமானத்தில் பயணித்த ஒரு நபரின் பையில் இருந்து பூனை திடீரென கீழே இறங்கியது. இதனை விமானத்தில் இருந்தவர்கள் செல்லமாக கவனித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பூனையை பிடித்தனர். இது தொடர்பான வீடியோவை ஜேசன் பிட்ஸ் என்ற சமூக வலைதள பயனாளி ஒருவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pubity (@pubity)