Youtube இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பிராங்க் செய்யும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் அடையாளம் தெரியாத நபர்களிடம் அவர்களை அச்சுறுத்துவது, பயமுறுத்துவது வேண்டுமென்றே அவர்களை கோபமடையச் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்து பின் அதை காமெடியாக மாற்றி அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதே இந்த பிராங்க் ஷோ. இதில் சில விபரீதங்களும் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அந்த வகையில்,

நபர் ஒருவர் சாலையில் கையில் உணவுப்பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு வருகிற நபர்களிடம் அதை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். பின் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நபர் வேண்டுமென்றே அதை புறக்கணிக்க அவரை அடிப்பதும் உதைப்பதும் என துன்புறுத்தி அந்த உணவுப் பொருளை வற்புறுத்தி எடுக்க வைக்கிறார்.

இதை காணும் முன்பின் தெரியாத மக்கள் நிஜமாகவே அந்த உணவுப் பொருளை வாங்கவில்லை எனில் இவர் அடிப்பார் உதைப்பார் என பயந்து அதை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். அப்படி ஒரு பெண் சாலையில் நடந்து வரும்போது இதே பாணியை அவர்கள் கையாள அந்தப் பெண் உணவு பொருளை எடுப்பதற்கு பதிலாக அதை பிராங்க் ஷோ என கண்டறிந்து அதை நடத்தியவருக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.