தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் ஹன்சிகா மோத்வானி. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கடந்த சோகேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஹன்சிகாவின் திருமண வீடியோ disney+ hotstar ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த திருமண வீடியோவில் நடிகை ஹன்சிகா பல விஷயங்கள் குறித்து பேசி உள்ள நிலையில் அவருடைய அம்மா ஹார்மோன் ஊசி போட்டது தொடர்பான சர்ச்சைகளுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது கோய் மில் கயா என்ற படத்தில் ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில், அப்படம் வெளியாகி 2 வருடத்தில் பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார். இதனால் ஹன்சிகா சீக்கிரம் வளர்வதற்காக அவருடைய அம்மா அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் தனக்கு 21 வயது இருக்கும்போது என்னுடைய அம்மா எனக்கு எதற்காக ஹார்மோன் ஊசி போட வேண்டும். அப்போது ஹார்மோன் ஊசி தொடர்பாக பரவிய சர்ச்சைகளால் நானும் என் அம்மாவும் மிகுந்த  வேதனை அடைந்தோம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹன்சிகாவின் அம்மா கூறுகையில், அந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்திருந்தால் நான் டாடா, பிர்லா போன்ற பணக்காரர்களை விட பணக்காரியாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் பஞ்சாபி மக்கள். எங்கள் மகள்கள் 12 முதல் 16 வயதுக்குள் வளர்ந்து விடுவார்கள். இது எங்களுக்கு ஆச்சரியமான விஷயம் தான் என்று கூறியுள்ளார். மேலும் ஹன்சிகாவின் தோழி ரிங்கியின் கணவரை ஹன்சிகா திருமணம் செய்துள்ள நிலையில் அது தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஹன்சிகா விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.