மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில் தமிழில் பையா 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்தது. கடந்த 2010-ம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான பையா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதில் நடிகர் ஆர்யா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வந்தது.

இந்நிலையில் ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தன்னுடைய மகள் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தேவையில்லாமல் போலியான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் ஜான்வி கபூர் தமிழில் நடிப்பதாக வெளிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது.