மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை அமலாபால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பலருடைய பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் நடிகை அமலாபாலை கோயில் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தடுத்தனர்.
இதனால், கோவிலுக்கு வெளியில் இருந்து கடவுளை வழிபட்டுவிட்டு திரும்பி சென்றார். இதற்கு இந்து ஐக்கிய வேதிகா தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.