தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், ஜாக்கி செராஃப், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் ரஜினியின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் சில நிறுவனங்கள் ரஜினியின் அனுமதியின்றி அவருடைய பெயர், குரல், புகைப்படம் போன்றவற்றை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரஜினியின் அனுமதி இன்றி அவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தடையை மீறி பயன்படுத்தினால் அவர்களின் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.