
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சயிப் அலிகான். இவருடைய வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை 6 இடங்களில் கத்தியால் குத்திய நிலையில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை கத்தியால் குத்திய வரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவர் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் சயிப் அலிகான் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இது தொடர்பாக தற்போது மகராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷ் ரானே பரபரப்பு கருத்தினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது நடிகர் சயிப் அலிகான் நடனமாடினார்.
அவர் உண்மையில் கத்தியால் குத்தப்பட்டாரா இல்லையெனில் நாடகம் ஆடினாரா.? வங்கதேசத்தினர் மும்பையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். முதலில் அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சயிப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் ஒருவேளை நடிகரை கடத்த வந்திருக்கலாம். அது நல்லது தான். குப்பைகளை அகற்ற வேண்டும். நடிகர் சயிப் அலி கான் மருத்துவமனையில்இருந்து வெளியே வரும் போது நான் பார்த்தேன். அதை பார்க்கும்போது எனக்கு அவர் உண்மையில் குத்தப்பட்டாரா இல்லையெனில் நாடகம் ஆடினாரா என்ற சந்தேகம் வருகிறது. மேலும் அமைச்சர் நடிகரைப் பற்றி இப்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.