ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வரும் நிலையில் அவருடன் படிக்கும் பிரணவ கிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தோழிகளாக பழகிய நிலையில் பிரணவ கிருஷ்ணா வீட்டிற்கு இளம்பெண் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி செல்லும் போது இளம்பெண்ணுக்கு கஞ்சா பிரியாணி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவி மயங்கி நிலையில் அவரை பிரணவ் கிருஷ்ணா தன் கணவர் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தார்.
அதன்படி அவருடைய கணவரான கிருஷ்ண கிஷோர் மனைவி கண் முன்னே அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அதை அவருடைய மனைவி வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை காட்டி அந்த இளம் பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளம் பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் அந்த வீடியோவை இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தம்பதியை கைது செய்துள்ளனர். இதேபோன்று அவர்கள் பலரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.