2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் KKR – SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் KKR 17 முறையும், SRH 9 முறையும் வென்று இருக்கின்றன. இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் RCB-க்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஏமாற்றத்தில் தோனி மைதானத்தை விட்டு வெளியேறியது தெரிந்ததே. இருந்தாலும், ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று கோலி தோனியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “இம்முறை நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும்” என்று தோனி வாழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தோனி, விராட் நட்பை வெற்றி, தோல்வி ஒருபோதும் பாதிக்காது என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.