இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விதிகளை கடுமையாக்கியுள்ளது.

இது தொடர்பான விரிவான அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே விளம்பர அழைப்புகளுக்கு 160 சீரிஸ் கொண்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல சேவை சார்ந்த அழைப்புகளுக்கு 140 சீரிஸ் தொடங்கும் எண்களை ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.