பொதுவாக மாணவர்களுக்கு 10, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் அனைத்துமே வாழ்நாள் முழுவதும் வேலை மற்றும் கடனுதவி என அனைத்திற்கும் முக்கியமானதாகிவிட்டது. என் நிலையில் எதிர்பாராத விதமாக இந்த சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் அல்லது இயற்கை சீற்றத்தால் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை இலக்க நேரிட்டால் அதனை எப்படி புதிதாக பெற்றுக் கொள்வது என்பதற்கான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது முதல் கட்டமாக சான்றிதழ் எங்கு எப்படி தொலைந்தது என்ற முழு விவரத்தை போலீசில் புகார் அளிக்க வேண்டும். www.eservices.tnpolice.gov.in என்ற இணையதள முகவரியின் மூலமாக புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொலைந்து போன இடத்தில் சான்றிதழ் குறித்து விசாரணை நடத்துவார்கள். அதன் பின்னரும் சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் நான் ரேசப்பில் என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

அவசர சூழலில் இந்த சான்றிதழ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நேர்காணல் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இந்த சான்றிதழை பயன்படுத்த முடியாது. அதன் பிறகு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்த புகார் அளிக்க வேண்டும். அதன் பின்னரும் சான்றிதழில் இருக்கும் முக்கிய விவரங்களை கூறிய பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து தொலைந்து போன ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைத்த பிறகு குறிப்பிட்ட சில நாட்களுக்குள் தொலைந்து போன சான்றிதழை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.