ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சியை தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் எம்எல்ஏவாக தேர்வான நிலையில் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்திற்கு செல்லவில்லை. இதன் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷர்மிளா ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷர்மிளா கூறியதாவது, பேரவைக்கு செல்ல தைரியம் இல்லாதவர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோடி பிரதமராக இருப்பது மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் அதே சமயத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை என்றும் தெரிவித்தார்.