தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் வருகின்ற பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இறுதி பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால் அதில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வருகின்ற மே ஆறு மற்றும் ஏழு ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.