மனைவி சௌமியாவை தருமபுரி தொகுதி வேட்பாளராக நிறுத்தியது ஏன்? என்பது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசியலில் குடும்பத்தினரை கொண்டு வரக்கூடாதென என் தந்தை 44 ஆண்டுக்கு முன்பு முடிவெடுத்தபோது இருந்த நிலவரம் வேறு. அது தற்போது மாறிவிட்டது. நான் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தேன். அதுபோலவே எனது மனைவியும்” என்றார்