இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றும் முன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
அனைத்து வகையான பள்ளிகளிலும் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக மகிழ்ச்சி, உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்கள், பூக்கள் கொண்டு அலங்கரித்து தேசிய கொடியை ஏற்றி திருவிழா கொண்டாடலாம்.
பஞ்சாயத்து தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து விழாவில் பங்கேற்க வைக்க வேண்டும். பிளாஸ்டிக் தேசிய கொடி பயன்படுத்தக்கூடாது. மேலும் தேசிய கொடி தலைகீழாகவோ, கிழிந்தோ இருக்கக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனம் தேவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.