தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனரான வித்யாசாகர் ரெட்டி நேற்று சென்னையில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது தற்போது 70. இவர் நரேஷ் மற்றும் விஜயசாந்தி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான ராகாசி லோயா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக திகழ்ந்தார். மேலும் இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சிரஞ்சீவி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.