உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் மற்றொரு சுவாரசியமான அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைவருக்கும் நீக்கு மற்றும் எனக்காக நீக்கு அம்சங்களை பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

ஆனால் சில சமயங்களில் டெலிட் ஃபார் அனைத்திற்கும் பதிலாக டெலிட் ஃபார் மீ என்பதை தவறுதலாக கிளிக் செய்து விடுகிறோம். இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக undo delete for me என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் கொண்டு வருகின்றது. இந்த புதிய அம்சம் மூலமாக உங்களுக்காக நீக்கப்பட்ட செய்தியை நீக்கலாம். ஆனால் அது ஐந்து வினாடிகள் மட்டுமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.