இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் சிறப்பு பண்டிகை நாட்களில் ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுவதும் வழக்கம்.

அவ்வகையில் தற்போது மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி தாம்பரம் – நெல்லை, ஏப்ரல் ஐந்தாம் தேதி நெல்லை மற்றும் தாம்பரம், ஏப்ரல் 6, 7, 10, 12, 13, 17 ஆகிய தேதிகளில் தாம்பரம் மற்றும் நாகர்கோவில், ஏப்ரல் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் மற்றும் எழும்பூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 6,13 ஆகிய தேதிகளில் எழும்பூர் மற்றும் திருவனந்தபுரம் சிறப்புரயில், ஏப்ரல் 9 மட்டும் 16 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் மற்றும் எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது