தூர்தர்ஷன் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து முற்றிலும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஊடக வல்லுனர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x பதிவில், நாடு முழுவதும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தூர்தர்ஷன் லோகோ முற்றிலுமாக காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது. இதை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜவகர் சிர்கார், லோகோ மட்டும் இன்றி தூர்தர்ஷன் முழுவதுமே காவி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் செய்திகள் மட்டுமே அதில் ஒளிபரப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.