சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக திகழும் மாமல்லபுரம், இப்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். தொல்லியல்துறை சார்பாக புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. இதன் காரணமாக மாமல்லபுரமானது சிறப்பு நிலை பேரூராட்சி எனும் அந்தஸ்தை பெற்றது.
சென்ற வருடம் சுற்றுலா பயணிகள் வருகையின் கணக்கெடுப்பில் உலக அதிசயமான டெல்லியிலுள்ள தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிவிட்டு மாமல்லபுரம் முதலிடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாமல்லபுரமானது துணை நகரமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதன் அழகு மேலும் கூடி வருகிறது.