குவைத்தில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.  இதில், 7 தமிழர்கள் உள்பட 40க்கும் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் நாளை இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு நாளை காலை 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.

பின்னர் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்  தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில்  ந்  தீ விபத்தில், உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என CM  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.