தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது.

அதனைப் போலவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை http://www.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.