திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனிவாசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சீனிவாசனுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.