சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டையில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஆறு மாதமாக காதலித்து வந்தனர். அந்தப் பெண் கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என பிரேம்குமாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அதனை பார்த்த பிரேம்குமார் அந்த வாலிபர் யார்? என்ன கேட்டபோது நான் அவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என கூறியதாக தெரிகிறது. மேலும் பிரேம்குமாரின் செல்போன் அழைப்பை அந்த பெண் ஏற்கவில்லை. இதனால் மன உளைச்சலில் பிரேம்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தனது தற்கொலைக்கு அந்த பெண் தான் காரணம் என கூறி அவரது செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.