80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ.
இந்நிலையில் நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறினார் என்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதற்கு குஷ்பு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “நான் திருமணத்திற்காக மதம் மாறினேன் என்று கூறுபவர்களுக்கு நமது நாட்டில் ‘சிறப்பு திருமணச் சட்டம்’ பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். நான் மதம் மாறவும் இல்லை. என்னை யாரும் மதம் மாற கேட்டுக்கொள்ளவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.