பிரபல பின்னணி பாடகி ரக்சிதா சுரேஷ் மலேசியாவில் கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் 2வது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ரக்ஷிதா சுரேஷ். இவர் VTK, கோப்ரா, PS-1 உள்ளிட்ட படங்களிலும் பின்னனி பாடகியாக பாடியுள்ளார். இவர் தெலுங்கில் இளையராஜா இசையில் வெளியான ‘எவடே சுப்ரமணியம்’ படத்தில் முதன்முதலாக பாடகியாக அறிமுகமானார்.

இந்நிலையில், இன்று காலை மலேசியாவில் கார் விபத்தில் சிக்கியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா, ஏர்பேக் உதவியால் சிறு காயங்களுடன் தப்பியதாகவும், 10 வினாடிகளில் முழு வாழ்க்கையும் கண் முன் வந்து சென்றதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.