திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வது வழக்கம். திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் திருப்பதி  சிறப்பு தரிசன டிக்கெட் விலையானது 300 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 200 ரூபாய் ஆகவும், லட்டு 50லிருந்து 25 ஆகவும் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் சில இடத்தில் தரிசன டிக்கெட் மற்றும்  லட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி கோயிலின் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பரவி வந்ததற்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பலரும் இந்த செய்தியை  உண்மை என்று நம்பி குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் இவை போலியான தகவல்கள் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று  அறிவித்துள்ளது.