தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. இந்நிலையில், திருநங்கைகள், சமூக தொல்லைகளில் இருந்து பாதிக்கப்படுவதாலும், மற்றும் தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி மற்ற திருநங்கைகளுடன் வாழ்வதாலும், அவர்களுக்கு வழங்கும் குடும்ப அட்டைகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டது.

அவர்களின் இக்கட்டான நிலையினால் தமிழ்நாடு அரசு, அவர்களுக்காக நல வாரியம் உருவாக்கி அடையாள அட்டைகளை வழங்குகிறது. மாவட்ட ஆட்சியர்கள், திருநங்கைகளின் அடையாள அட்டைகளை சரி பார்த்து, சரியானவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளனர்.