தமிழகத்தில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூன் 4 ஆம் தேதி சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்றும் வெப்பம் 41.6 டிகிரியை தாண்டியுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் 5 முறை மட்டுமே சென்னையில் வெப்பம் 42 டிகிரியை தாண்டியுள்ளது. அதில் ஒன்று இந்தாண்டு ஜூன் 4ஆம் தேதி ஆகும். கத்திரி முடிந்தும் வெயில் குறையாததால் மக்கள் வெளியே வர தயக்கம் காட்டி வருகின்றனர்